கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செப்டம்பர் 30 வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும், என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பூஸ்டர் டோஸ் (Booster Dose)
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. 75வது சுதந்திரதின பொன் விழாவையொட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அரசு இலவசமாக பூஸ்டர் டோஸ் வழங்குகிறது.
இலவச பூஸ்டர் (Free Booster)
அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. செப்டம்பர் 30 வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் விரைந்து செலுத்த வேண்டும்.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் செப்டம்பர் 30க்குள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுமாறு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
ஆரோக்கியம் நிறைந்த பாதாம் பால் காஃபி, டீ!
வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புபவரா நீங்கள்: இதோ 10 யோசனைகள்!