தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தேர்வணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Road Inspector பணிக்கு 751 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2023 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவழியை தொடர்பு கொள்ளவும். இத்தேர்விற்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக இவைச பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுபயன்பெறலாம்.
மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுர வாரியத்தால் (TNUSRB) அறிவிக்கப்பட்டவுள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு: காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக கடந்த 25ம் தேதி முதல் அலுவலக வளாகத்தில் நடந்து வருகிறது.
இங்கு நடத்தப்படும் ஒவ்வொரு போட்டித்தேர்வுகளுக்கும் முன்னணி தனியார் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
வாரம் ஒரு மாதிரி தேர்வு நடைபெறும். எனவே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: