தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவச்ச வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) Combined Graduate Level தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் Combined Graduate level தேரிவிற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21 செப்டம்பர் 2022 அன்று தொடங்கப்பட்டது.
தற்போது, இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதிவை தொடருங்கள்.
இத்தேர்விற்கான கல்வி தகுதியாக "ஏதாவது ஒரு பட்டப்படிப்பு (Any Degree)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடத்திட்டத்தின் படி,
- General Intelligence & Reasoning
- General Awareness
- Numerical Aptitude
- English Comprehension
தமிழ்நாடு அரசின் சார்பில் SSC தேர்வுகளுக்கான பயிற்றுநர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம், இணைய வழியிலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. நேரடியாக வர விரும்பும் மக்களுக்கு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடதக்கது. முகாம் 9 அக்டோபர் 2022 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னையில் நடைபெறும். எனவே, விருப்பமுள்ளவர்கள் நிச்சயம் பங்கேற்று பயனடையுமாறு, அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பயிற்சி ஆகியவற்றிற்கான வகுப்புகளும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் (Whatsapp) எண்ணிற்கு தங்களது பெயர், கல்வித் தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கை வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய மற்றும் இப்பயிற்சி வகுப்பிற்கு தங்களை பதிவு செய்து கொள்ள 9597557913 என்ற Whatsapp எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வலுவக மின்னஞ்சல் முகவரி -peeochn@gmail.com யையும் அணுகலாம்.
மேலும் படிக்க:
SSC Recruitment 2022: 20,000த்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள், அறிய வேலைவாய்ப்பு!