
சென்னை பல்கலையின் இலவச கல்வி திட்டத்தில், தனியார் கல்லுாரிகளில் சேர்க்கை பெற, ஆன்லைன் வழியே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கும் இலவச கல்வி திட்டம், சென்னை பல்கலை சார்பில், 10 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதற்கு, மாணவர்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச கல்வி (Free Education)
இதுகுறித்து, பல்கலையின் பதிவாளர் இளங்கோவன் வெள்ளைச்சாமி கூறுகையில், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
ஆதரவற்ற, பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்படி, 2022- - 23ம் கல்வி ஆண்டில், சென்னை பல்கலையின் இணைப்பு பெற்றுள்ள சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், குறிப்பிட்ட இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதில் சேர விரும்பும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சென்னை பல்கலையின், www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள், இணையதளத்தில் உள்ள இணைப்பில் பதிவேற்ற வேண்டும்.
இலவச கல்வித் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த ஆண்டும், தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: உடனடியாக துணைத் தேர்வு!
பள்ளி கல்வித்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளே அழைப்பு உங்களுக்குத் தான்!