News

Tuesday, 08 November 2022 04:48 PM , by: T. Vigneshwaran

Free Electricity

இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வரும் 11-ம் தேதி மின் இணைப்பிற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இலவச மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த 4,50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பொருட்டு, கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது.

அதே போல, நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தெரிவித்தது போல மேலும் 50,000 விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு அரசாணையை வருகின்ற 11-ம் தேதி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சொன்னது சொன்னது போல நிறைவேற்றி வருகிறோம். எனவே நாங்கள் சொன்னது போல, கரூரில் வரும் 11-ம் தேதி 20 ஆயிரம் விவசாயிகள் முதல்வர் கையில் ஆணையை பெறுகிறார்கள். மீதம் உள்ள 30 ஆயிரம் பேருக்கு படிப்படியாக ஆணைகள் வழங்கப்படும்.

இது குறித்து எங்களுடைய மின் வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த ஆணையை பெறப் போகிற 50 ஆயிரம் விவசாயிகளுக்கு தொடர்பு கொண்டு இதனை தெரிவித்த போது, பல பேர் இதை நம்பவில்லை. நீண்ட காலமாக காத்திருக்கும் அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆணைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தனர். முன்பதிவு செய்ததன் அடிப்படையில், இந்த 50 ஆயிரம் பேருக்குமே இலவச மின் இணைப்புகளுக்கு உண்டான ஆணைகள் வழங்கப்படுகிறது.

இதில் இருந்து 100 பேர் வரவில்லை என்றாலும் கூட அடுத்து இருக்கின்ற 100 பேருக்கு இந்த ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த ஒரு நம்ப முடியாத திட்டத்தை நாங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம்" என்று கூறினார்.

மேலும் படிக்க:

விலை உயரும் டீ,காபி, எவ்வளவு தெரியுமா? மக்கள் அவதி!

நற்செய்தி! TNPSC, காவலர் இலவச மாதிரி தேர்வு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)