வங்க கடலில் உருவான புரெவி புயல் (Burevi Cyclone) திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) தெரிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இலவச உணவு:
மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை குடிசைப் பகுதி மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி வரை இலவச உணவு (Free Food) வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edapadi Palanisamy) அறிவித்துள்ளார். இதனையடுத்து சென்னையில் வசிக்கும் 5.3 லட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 26 லட்சம் ஏழை மக்களுக்கு இன்று முதல் 13-ஆம் தேதி இரவு வரை மூன்று வேளை உணவு சமைத்து வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் சென்னை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
நிவர் மற்றும் புரெவி புயல்களின் அடுத்தடுத்த தாக்குதல்களால், தமிழகமெங்கும் கனமழை பெய்து ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகிறது. மேலும், சென்னையில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை மக்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை அறிவித்தார் முதல்வர். இத்திட்டத்தால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழகத்தில் கனமழை நீடிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச சட்ட உதவி! உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவிப்பு!