பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 May, 2023 12:01 PM IST
Free parking at Nanganallur Road Metro Rail Station with Metro Travel Card

மெட்ரோ இரயில்களில் கடந்த மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்து உள்ளனர் எனவும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் வாகனத்தை மெட்ரோ பயண அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

மாதம் வாரியாக பயண விபரம்:

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 28.04.2023 அன்று 2,68,680 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2023, ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 23,39,724 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,83,119 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 3,56,489 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4,136 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 1,964 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இலவசமாக பார்க்கிங்:

மேலும் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங்கள் வாகனத்தை மெட்ரோ பயண அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் எனவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருகிற மே மாதம் 31 ஆம் தேதி வரை எந்த கட்டணமும் இன்றி மெட்ரோ இரயில் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையை பயன்படுத்தி நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. இத்திட்டங்களும் நிறைவடையும் நிலையில் சென்னையில் மெட்ரோவினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Pic courtesy- CMRL

மேலும் காண்க:

கடைசி சான்ஸ்.. அதிகரித்த EPFO பென்சன் பெற விண்ணப்பிக்க மறக்காதீங்க

English Summary: Free parking at Nanganallur Road Metro Rail Station with Metro Travel Card
Published on: 02 May 2023, 12:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now