உத்தரகாண்ட் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மாதந்தோறும் ஒரு கிலோ ராகி இலவசமாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இலவச ராகி (Free Ragi)
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் உணவுப்பொருள்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ ராகி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேஷன் அட்டைதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டு இனி ரேஷன் கடையில் மே மாதம் முதல் ஒரு கிலோ ராகி இலவசமாக வழங்கபடும். மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் மே 10ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். அரசின் புதிய அறிவிப்பால் மாநிலத்தில் உள்ள 13.91 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
PM கிசான்: ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும் தெரியுமா?
ரேஷன் கடைகளில் இனி புதிய வசதி: ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அமல்!