News

Monday, 02 January 2023 12:46 PM , by: R. Balakrishnan

Ration shop

நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து, முதல் வாரத்தில் ஒவ்வொரு நாளும் மூன்று ரேஷன் கடைகளுக்குச் சென்று மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறு இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) பொது மேலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தினசரி அறிக்கைகள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலவச ரேஷன் (Free Ration)

தேசிய உணவு தானிய சட்டத்தின்படி, ஏழைகளின் இந்தாண்டுக்கான தானிய தேவையை (உரிமையை) இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயை முன்னிட்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மத்திய அரசால் நிறுத்தப்பட்டது.

உணவுத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, மத்திய அரசின் உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று முன்தினம் (டிச. 30) அனைத்து மாநில உணவுத் துறைச் செயலர்களையும் சந்தித்து இலவச உணவு தானியங்கள் வழங்குவது குறித்தும், தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதைத் தீர்ப்பது குறித்தும் ஆலோசித்தார்.

கூடுதலாக, பயனாளிகளுக்கு உணவு வழங்குவதற்காக டீலர்களின் மார்ஜின்களை (ரேஷன் கடை உரிமையாளர்களின்) எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து அமைச்சகம், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றை தொடர்ந்து, 6 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியபோது, PMGKAY மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறப்பட்டது. இது ஆறு மாதங்கள் தடைபட்டாலும், 2020இல் தொடங்கி 28 மாதங்கள் வரை, அடிக்கடி நீட்டிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் குறிப்பின்படி, PMGKAY தொடங்கப்பட்டதில் இருந்து டிசம்பர் 2022 வரை அதன் ஒட்டுமொத்த செலவு ரூ. 3.91 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பென்சன் விதிகளில் மாற்றம்: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி!

TNPSC குரூப் 4: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)