MFOI நிகழ்வின் இரண்டாம் நாள் அமர்வில் ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, துபாய் பிரதிநிதி பிஜு ஆல்வின் ஆகியோர் பங்கேற்ற நிலையில் விவசாயிகளை கௌரவிக்கும் கிருஷி ஜாக்ரனின் முயற்சியை மனமுவந்து பாரட்டினார்கள்.
உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையிலும் வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI விருது வழங்கும் விழாவுடன், வேளாண் கண்காட்சியும் நடைப்பெற்று வருகிறது. இதனிடையே, விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்துள்ளது.
நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நிகழ்வு தொடங்கிய நிலையில், இரண்டாவது நாள் நிகழ்வுகள் இன்று நடைப்பெற்றது. மாநிலங்கள் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி நிகழ்வில் பங்கேற்று மில்லினியர் விவசாயிகளை விருது வழங்கி கௌரவித்து சிறப்புரையாற்றினார்.
MFOI இன் நோக்கத்தை மலேசியா மற்றும் ஜப்பானுக்கு எடுத்துச் சென்றதற்காக டாக்டர் சி.கே.அசோக் குமாருக்கு கிரிஷி ஜாக்ரானின் நிறுவனர் எம்.சி.டொம்னிக் நன்றி தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர் மற்றும் துபாயின் பி.எம்.ஓ அலுவலகத்தில் இருந்து வந்த பிஜு ஆல்வினை வாழ்த்தியும் எம்.சி.டொம்னிக் உரையாற்றினார். பிஜு ஆல்வின் கூறுகையில், "இந்தியாவின் கோடீஸ்வர விவசாயி என்ற கருத்தின் மூலம் நமது பிரதமர் திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஈர்க்கப்பட்டு, இந்த யோசனையை நேரில் சென்று புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இது யாரும் யோசிக்காத புதிய கருத்து என்று அவர் கூறினார்."
ஒன்றிய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசுகையில், “இத்தகைய நோக்கமுள்ள விவாதத்திற்கு தன்னை அழைத்ததற்காக டொமினிக்கிற்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், "நமது நாட்டில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் என நான்கு சமூகங்கள் இருப்பதாக பிரதமர் மோடி மன் கி பாத்தின் போது கூறினார். இவர்களில் எவருக்கும் சாதி இல்லை" என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாயிகளின் பொருளாதார நிலையை மாற்றியுள்ளார் என்றும் அவர் கூறினார். இதற்கு முன்பு இந்தியா கோதுமை மற்றும் அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வந்தது எனத் தெரிவித்தார்.
விவசாயிகளின் முயற்சியை பாராட்டிய அவர், விவசாயிகளால் இலவச ரேஷன் சேவை சாத்தியமாகியுள்ளது என்றார். "முன்பு, விவசாயிகள் தங்கள் பயிர் சேதத்திற்கு 50 சதவீத சேதத்திற்குப் பிறகு மட்டுமே காப்பீடு செய்து வந்தனர், இப்போது அவர்கள் 30 சதவீத சேதத்திற்கு அதே சேவையைப் பெறலாம்."
மேலும், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினார். "யூரியா நிலத்தை உலர்த்துகிறது, அதே நேரத்தில் மாட்டு சாணம் மண்ணை நீண்ட காலத்திற்கு ஈரமாக வைத்திருக்கும்," என்று அவர் கூறினார். "வருங்கால சந்ததிக்கு பாழாய்ப்போன நிலத்தை விட்டுச் செல்லக்கூடாது" என்ற நிலையான எதிர்காலம் குறித்த அறிவுரையினை வழங்கி, தனது உரையினை நிறைவு செய்தார்.
இதையும் காண்க:
ஒரு ஏக்கருக்கு உற்பத்தி செலவைக் குறைக்கவும்- MFOI நிகழ்வில் நிதின் கட்கரி பேச்சு
இந்திய மண்ணில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி வறண்டு கிடக்கிறது- MFOI நிகழ்வில் SML இயக்குனர்