பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 June, 2022 4:40 PM IST

கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப்போவதாக, மாநில அரசு அறிவித்துள்ளது. இது, கல்லூரி மாணவர்களின் வாகனக் கனவை நனவாக்குவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக வெற்றி அடைந்துள்ளனர். இன்றையப் பெண்கள் படிப்பில் மட்டுமின்றி வேலை பார்க்கும் இடத்திலும் ஆண்களுக்கு ஈடாக செயல்பட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு உதவி

மத்திய, மாநில அரசுகளும் பெண்களையும் பெண் குழந்தைகளையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இவை பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கின்றன. அப்படி ஒரு திட்டம்தான் பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டம். இது உத்தரப் பிரதேச மாநில அரசின் ராணி லட்சுமிபாய் திட்டம்.

இலவச ஸ்கூட்டி

ராணி லட்சுமிபாய் யோஜனா திட்டத்தின் கீழ் திறமையான பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. தேர்தலின் போது பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்பு படிக்கும் சிறந்த மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் தன்னிறைவுக்கான நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தகுதி

அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் தவிர, தனியார் பல்கலைக் கழக மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகள் யோகி ஆதித்யநாத் அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

வங்கிக்கணக்கில் பணம்

இத்திட்டத்தின் கீழ், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஸ்கூட்டி வாங்க அரசு நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். ஸ்கூட்டி கிடைத்தவுடன் கல்லூரிக்கு செல்வது சுலபமாகிவிடும்.

நிபந்தனைகள்

  • பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் படிக்க வேண்டும்.

  • 10 மற்றும் 12ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

  • வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும்.

  • திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே செல்லுபடியாகும்.

  • மாணவிகள் மட்டுமே பலன்களைப் பெற முடியும்.

மேலும் படிக்க...

சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு!

34 மாணவர்கள் தற்கொலை - விரக்தியின் உச்சக்கட்டம்!

English Summary: Free Scooty-Government Super Plan for College Girls!
Published on: 12 June 2022, 04:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now