கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலை வாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்து, நேற்று நடத்தி உள்ளார்.
வேலை வாய்ப்பு முகாம் (Job Fair)
தமிழக அரசு மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு வழிகாட்டும் மையம் மூலமாக வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள். அரசு துறைகளை தவிர தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் முகாம் ஏற்பாடு செய்யப்படும்.
அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பாக 16 தொழில்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இலவச ஸ்மார்ட்போன் (Free smartphone)
நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர் பிரபு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், 35 மாற்றுத் திறனாளிகளுக்கு 35,500 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் படிக்க
நம்ம ஊரு பூண்டுக்கு இவ்வளவு மவுசா: சீனாவை பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் முதலிடம்!
இரண்டாகப் பிரியும் TNPSC தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசின் திடீர் முடிவு!