தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக ஓய்வுபெற்ற தொழிலார்களுக்கு பல்வேறு சலுகைகள் குறித்த திட்டங்களை அறிவித்து வருகிறது.
அதன் படி, ஓய்வுபெற்ற தொழிலார்கள் மற்றும் அவர்களது துணைவியர் அதாவது மனைவிக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பயண அட்டை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அதே போல் நிரந்தர பணியாளர்களின் துணைவியர்களுக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.
மேலும், இத்தகைய அறிவிப்பிற்கு ஓய்வுபெற்ற தொழிலார்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஆகஸ்ட் 28 அன்று நடைபெறவுள்ளது!