மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் மசோதாக்களுக்கு (Agriculture Laws) எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
விவசாயிகளுக்கு வைஃபை:
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் போராட்டம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போராடும் விவசாயிகளுக்கு வைஃபை (Wifi) வசதியை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Aravindh kejriwal) செய்து கொடுத்துள்ளார். ஆரம்பம் முதலே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் அவர் டெல்லியில் விவசாய போராட்டம் நடத்திவரும் திக்ரி என்ற பகுதியில் செல்போன் சிக்னல் முறையாக கிடைக்கவில்லை என்ற தகவல் அவருக்கு தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து உடனடியாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் இலவச வை-ஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து போராடும் விவசாயிகள் தற்போது செல்போன் உள்ளிட்ட உள்ளிட்டவைகளை இயக்குவதில் பிரச்சனை இல்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் டெல்லி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வரின், இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கிராம மக்கள் ஒன்று கூடி 2,000 மரக்கன்றுகள் நடவு! மற்ற கிராமங்களுக்கு முன்னோடி!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!