கஜா புயலால் சமீபத்தில் புதுக்கோட்டை , தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி , அரியலூர், கடலூர் தேனீ மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், தோட்டக்கலை பயிர்கள் பெரும் சேதமடைந்தன. கஜா புயல் கணக்கெடுப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட பயிர் சேதத்திற்கு தகுந்தாற் போல் கஜா இழப்பீடு தோட்டக்கலைத்துறை , அவர்கள் வங்கியில் ஒப்படைத்தது.
தஞ்சாவூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், புதுக்கோட்டை, திருவாரூர், மதுரை, தேனீ மாவட்டங்களில் விவசாயிகள் பல்வகை காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்கின்றன.
இதில் நிரந்தர பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ 18 ஆயிரம், நீர் பாசன பயிர்களுக்கு ரூ 13 ஆயிரம் , இதர மானாவரி பயிர்களுக்கு ரூ 8 ஆயிரமும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.
மற்றும் இதை குறித்து மதுரை மாவட்டம் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், புயல், வெள்ளம், போன்ற இயற்கை சீற்றம் காலங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரணநிதியில் (STRF) விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் இந்த இழப்பீடு தொகையை வைத்து விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனைத்தான் அடைப்பார்கள் .இதற்காக மீண்டும் அதே இடத்தில் பயிர்களை உருவாக்க செய்வதற்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயிர்களை மீண்டும் உருவாக்க செய்வதற்கு வாழை,ஹெக்டருக்கு ரூ 26,250, பப்பாளிறு ரூ22,500, மாமரத்துக்கு ரூ 6,000 எலும்பிச்சை ரூ 13,000, கொய்யாவுக்கு ரூ 9,000, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ 11 கோடி, அடுத்து திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ 4, கோடி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ90, இலட்சம், மதுரை மாவட்டத்திற்கு ரூ 82, இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
k.sakthipriya
krishi jagran