இந்தியாவை ஆட்டிப்படைத்து பலவித பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் இரண்டாம் அலையின் தீவிரம் கட்டுக்குள் வரும் நிலையில், அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளில் பல விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தமிழகத்தில் தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது கொரோனா தொற்று மெல்ல குறைந்துள்ள நிலையில், 19-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் ஊரடங்கில் மேலும் எந்த விதமான தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதன்போது, தமிழகத்தில் 2,405 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,28,806 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 148 பேர் கொரோனா நேர்மறையாக கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 49 பேர் இறந்துள்ளனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,606 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 29,950 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று அரசு மருத்துவமனைகளில் 38 பேர், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் இறந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 33,606 -ஐ நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 3,006 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,65,250 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 1,46,665 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 2,405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,356 ஆண்களும் மற்றும் 1,049 பெண்களும் உள்ளார்கள்.
மேலும் படிக்க:
கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!
கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாரண்டி ரத்து: ஐகோர்ட் அதிரடி