உலக முழுவதும் போர் முகம் சூழ்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து மீழாத உலகம் அடுத்த போரை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போர்களம் சூடுபிடிக்க தொடங்கினால், உயிர் சேதம், பொருள் சேதம் மட்டுமின்றி வருங்காலத்தின் எதிர்காலமும், வீணாவதை நம் கண்ணேதிரே பார்க்கும் சுழல் ஏற்படும். வருங்காலத்தின் உணவு பிரச்சனையை சரி செய்வது மிக அவசியமானதாகும்.
தற்போது, உலகம் இப்போது ஒரு கட்டத்தை கடந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துக்கொண்டியிருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போரில் ஐரோப்பா கண்டமே அதிர்ந்தது. இந்த பகுதியில் ஐ.நா.வின் உதவியற்ற நிலை அதன் பலவீனத்தை பிரதிபலிக்கிறது, ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு தாக்குதலைத் தொடர்கிறது. மறுபுறம், தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக, உலகில் உணவு, எரிபொருள் மற்றும் உர விநியோகத்தில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில் உலகில் பொருளாதார மந்தநிலை, பருவநிலை மாற்றப் பிரச்சனைகள், பயங்கரவாதம் போன்றவை உலகத்திற்கே தலைவலியாக மாறியுள்ளது. அத்தகைய நேரத்தில், ஜி -20 போன்ற ஒரு முக்கியமான அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. இது நிச்சயம் உணவு பற்றாக்குறையில் மிக முக்கியமான முயற்சி, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ADM இன் முதல் நாளில், இந்தூரில் 13-15 பிப்ரவரி 2023 வரை மூன்று நாள் நிகழ்வு நடைபெறும். G20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சுமார் நூறு பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.10,000 மானியம்: 5ரம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வழங்கப்படுகிறது!
மூன்று நாட்கள் நடைபெறும், இந்த மாநாட்டின் முதல் நாளில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் விலைமதிப்பற்ற உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
இரண்டாவது நாளில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொள்கிறார். இதன் பின்னர், பங்கேற்கும் உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இடையே பொதுவான பேச்சு வார்த்தை நடைபெறும்.
இதன் பின்னர், மூன்றாம் நாள் அனைத்து தொடர்புடைய உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கலந்துரையாடல் மற்றும் பங்கேற்பிற்கான வணிக அமர்வு நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி
ஆதார் அட்டை பயன்படுத்தி Transaction செய்யலாம், இனி OTP தேவையில்லை