News

Wednesday, 13 January 2021 04:14 PM , by: Daisy Rose Mary

மாட்டு சாணத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் பெயிண்டை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

மாட்டுச் சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி. பழங்காலம் முதல் இக்காலம் வரையில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து வீட்டு வாசல்களில் தெளித்து வரும் பழக்கம் இருந்து வருகிறது. மாட்டு சாணம் இயற்கை உரமாகவும், சுற்றுச்சூழல் மாசு இல்லாத எரிப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பெயிண்ட் 

இதைனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத்தன்மை இல்லாத, பாக்டீரியா எதிர்ப்பு கொண்ட நாட்டின் முதல் இயற்கை பெய்ண்டை காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது. புத்தாக்க முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பெயிண்டை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது இல்லத்தில் அறிமுகப்படுத்தினார்.

காதி பிரகிரிதிக் பெயிண்ட்(Khadi Prakritik paint) என அழைக்கப்படும் இது பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது. பசுஞ் சாணத்தை முக்கிய மூலப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை பெயிண்டை வாடை அற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.

 

மலிவு விலை பெயிண்ட் 

இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பும் சூழலில், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பெயிண்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிஸ்டெம்பர் பெயிண்ட் லிட்டர் ரூ.120க்கும், எமல்சன் பெயிண்ட் லிட்டர் ரூ.225க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப் பெரிய நிறுவனங்களின் பெயிண்ட் விலையில் பாதிக்கும் அளவு குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் அமைச்சர் இந்த பெயிண்டை நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காதி பிரகிரிதிக் பெயிண்ட், டிஸ்டெம்பர் மற்றும் பிளாஸ்டிக் எமல்சன் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இத்திட்டத்தை காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். பின் இதை ஜெய்ப்பூரில் உள்ள காதி ஆணையத்தின் குமரப்பா தேசிய கைவினை காகித மையம் மேம்படுத்தியது.
இந்த காதி வண்ணப் பூச்சுகள், மும்பையில் உள்ள தேசிய பரிசோதனை இல்லம், புது தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம், காஜியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை இல்லம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

காதி பிரகிரிதிக் எமல்சன் வண்ண பூச்சு BIS 15489:2013 தரச்சான்றையும், காதி பிரகிரிதிக் டிஸ்டெம்பர் BIS 428:2013 தரச்சான்றையும் பெற்றுள்ளது. ‘

மேலும் படிக்க..

தைப் பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும் உழவர்கள் மகிழட்டும் - முதல்வர் வாழ்த்து!!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ஐந்து ஆண்டு கால சாதனை : ரூ. 90,000 கோடி காப்பீடு வழங்கல்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)