ரஷ்யா - உக்ரைன் இடையேயானப் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. எனவே கச்சா விலைக்கு ஏற்ப, எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தவும், மானியத்தைக் கைவிடவும் மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிலிண்டர் விலை 1000ரூபாயைத் தாண்டும் அபாயம் உருவாகியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்தைக் காரணம் காட்டி 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, படிப்படியாக உயர்த்தப்பட்டுத் தற்போது 900ரூபாயில் நிற்கிறது. இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் கடுமையாக அதிகரித்துள்ளது.
ஒருபுறம் கச்சா எண்ணெய் விலையேற்றம், அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்கள் விலையேற்றம் என நாட்டு மக்கள் அனைவருமே பெரும் நிதிச்சுமையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
ரூ.1000த்தைத் தாண்டும்
இல்லத்தரசிகளுக்கு கவலை தரும் விதமாக, சமையல் சிலிண்டர் விலையும் அதிரடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சமையல் சிலிண்டர் விலை 1000 ரூபாயைத் தாண்டும் நிலை உருவாகியுள்ளது.
அதாவது, சிலிண்டர் விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயரும் எனவும், இம்மாத இறுதியில் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலையேற்றத்தால் எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கத்தை பொதுமக்கள் மீது சுமத்தும் வகையில் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பை நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
மானியம் கட்
எல்பிஜி சிலிண்டர்கள் தொடர்பாக மத்திய அரசு, இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கக்கூடும். முதலில், மானியம் இல்லாமல் சிலிண்டர்களை அரசு வழங்கலாம். இரண்டாவதாக, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மானியத்தின் பலன் வழங்கப்படலாம்.
மேலும் படிக்க...
தினமும் இந்த மசாலாப் பொருட்கள் - உடல் எடையை உடனேக் குறையும்!