News

Friday, 01 July 2022 08:01 AM , by: Elavarse Sivakumar

வணிக பயன்பாடு கேஸ்சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 187 ரூபாய் வீதம் குறைத்துள்ளன. இந்த அறிவிப்பால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறை விலையை மாற்றுவது எண்ணெய் நிறுவனங்களின் வாடிக்கை.

சர்வதேச நிலவரம்

சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.குறிப்பாக, சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

1ம் தேதி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

இதன்படி, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.187 குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.187 குறைந்து 2,186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு வணிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

மேலும் படிக்க...

7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!

வங்கிக்கணக்கில் வந்த ரூ.1.42 கோடி சம்பளம்- தப்பியோடிய ஊழியர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)