News

Thursday, 01 September 2022 03:24 PM , by: Deiva Bindhiya

Gas cylinder price Rs. 96 fall: business people are happy!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி பொதுவாக எண்ணெய் நிறுவனங்களால் சமையல் கியாஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்காக கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.96 அதிரடியாக சரிவைக்கண்டுள்ளது. கடந்த மாதம் ரூ.2,141-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.2045 ஆகவும் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் மிக குறைந்த அளவில் சிலிண்டர் விலை குறைந்தது என்பது குறிப்பிடதக்கது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் ரூ.96 குறைந்து இருப்பதால் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வர்த்தக பிரமுகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த மாதங்களை ஒப்பிடும்போது, இந்த மாதம்தான் விலை குறைக்கப்பட்ட விகிதம் அதிகமாகும். சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வர்த்தக பயன்பாட்டுக்கு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதன் விலை குறைக்கப்பட்டதை வரவேற்று உள்ளனர்.

அதே நேரத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து கொண்டதன் மூலம் பலருக்கு நஷ்டமும் ஏற்பட்டது. குறிப்பாக கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் ஆயிரக்கணக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை இருப்பு வைத்து இருப்பார்கள். தற்போது சிலிண்டர் விலை ரூ.96 குறைக்கப்பட்டதால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக காணப்பட்டது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட போதிலும் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 14 கிலோ எடையுள்ள அந்த சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1068.50-க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க:

வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடன் வசதி: MRK.பன்னீர்செல்வம் தகவல்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்டம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)