உலக வங்கி சமீபத்தில் தெற்காசியாவுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் சாராம்சம் என்னவெனில் தெற்காசியா நாடுகளின் வளர்ச்சி, வருவாய், உற்பத்தி, ஆட்சிமுறை போன்றவற்றை ஆராய்ந்து, உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதத்தை கணித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதன் விகித சாரம் கூடுதலாக இருக்கும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதம் என்றும், நடப்பு ஆண்டில் 2019-2020 இல் 7.5 சதவீதமகா இருக்கும் என கூறியுள்ளது. நுகர்வோருக்கான சந்தை, தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதனாலும், தனியார் தொழில் நிறுவனங்களும் அதிக அளவில் முதலீடு செய்வதினாலும், அந்நிய தேசத்தினரும் வர்த்தகம் செய்ய விளைவதால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்கிறது உலக வங்கி.
வேளாண்துறையில் 4 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்கிறது. மேலும், கச்சா எண்ணெயின் விலை கட்டுப்பாட்டில் இருக்கும். பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும் என்றும் கணித்துள்ளது.