மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடை பெற்ற 6 ஆம் கட்ட தேர்தலானது 63% வகுப்பதிவுடன் நிறைவு பெற்றது. டெல்லி உட்பட 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசதில் உள்ள 59 தொகுதிகளுக்காக இந்த தேர்தல் நடை பெற்றது.
தென் மாநிலங்கள் அனைத்திலும் தேர்தல் நிறைவடைந்த நிலையில், தற்போது வட மாநிலங்களில் சில தொகுதிகளே எஞ்சியுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் 979 வேட்பாளர்கள் பங்கேற்றனர். 10.17 கோடி பேர் வாக்குரிமை பெற்ற வாக்காளர்களாக இருந்தனர். வாக்களிப்பதற்காக சுமார் 1.13 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தலை நகர் டெல்லியிலும், மேற்கு வங்கம் மாநிலத்திலும், பாதுகாப்பு பணிக்காக 50 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.
6 ஆம் கட்ட தேர்தலில் டெல்லி (7), மேற்கு வங்கம் (8), உத்திரபிரதேசம் (14), மத்தியபிரதேசம் (8), ஜார்கண்ட் (4), ஹரியானா (68), பீகார் (9), போன்ற தொகுதிகளில் நடைபெற்றது. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 80.51 % வாக்குகள் பதிவாகி இருந்தன. குறைத்தபட்சமாக 54.26% வாக்குபதிவுடன் உத்திரபிரதேசம் மாநிலம் இருந்தது. தலைநகர் டெல்லியில் 59% வாக்குகள் பதிவாக்கிருந்தன.
வாக்கு பதிவு முடிந்தவடன் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வாக்குகள் என்னும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரி கூறினார். மேலும் அவர் கூறுகையில் 6 ஆம் கட்ட தேர்தலில் 63% வாக்குகள் பதிவாகி உள்ளன என்றார்.
7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தலில், இதுவரை 6 கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 534 தொகுதிகளில் இதுவரை 484 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்துள்ளது. 7 ஆம் கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடை பெறவுள்ளது. இதன்பின் வரும் 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலை அறிவிப்புகள் வெளியாகிவிடும்.