News

Monday, 06 May 2019 01:57 PM

மக்களவை தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கிய தேர்தல், நான்கு கட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலானது 7 மாநிலங்களுக்கும், 51 தொகுதிகளுக்கும் நடை பெறுகிறது.

மொத்தம் 7 மாநிலங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் (7/29), பீகார் (5/40), ஜார்கண்ட் (4/14), உத்திர பிரதேசம் (14/80), ஜம்மு காஷ்மீர் (2/6), மேற்கு வங்கம் (7/42), ராஜஸ்தான் (12/25) ஆகிய மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 374  தொகுதிகளுக்கு  தேர்தல் நிறைவடைந்துள்ளது.  ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் தொகுதிகளுக்கு இன்றுடன் தேர்தல் நிறைவடைகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் 8 .75 கோடி வாக்காளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 4.63 கோடி பேர், மற்றும் பெண் வாக்காளர்கள் 4.12 கோடி பேர். 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராகுல் காந்தி மற்றும் ஸ்மித்தி ராணி ஆகியோர் போட்டியிடும் அமேதி தொகுதியும் இதில் அடங்கும். 96,௦௦௦ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 1 லட்சத்திற்கும் அதிகமான படைவீரர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.      

மேற்கு வங்கத்திலும், காஷ்மீரிலும் பாதுகாப்பு கருதி அதிக அளவில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதினால் இந்த தேர்தலில் என்றும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று  காஷ்மீரிலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதினால் படைவீரர்கள் பெருமளவில் குவிக்க பட்டுள்ளனர். 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)