1.புவிசார் குறியீடு பெற்ற கம்பம் பன்னீர் திரட்சை
கம்பம் பன்னீர் திரட்சை , சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் பன்னீர் திராட்சையில் அதிக திராட்சை விளையும் பகுதியாகும். இருப்பினும், ‘பன்னீர்’ வகை முக்கியமாக கம்பம் பள்ளத்தாக்குடன் தொடர்புடையது, இங்கு சாகுபடி பரப்பளவு 10 கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2.ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் இஞ்சி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.
தக்காளி, வெங்காயம் போன்றவற்றின் வரத்து அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதேசமயம் பீன்ஸ், இஞ்சி போன்றவற்றின் வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை அதிகரித்தது.
3. இன்றைய தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 45,440க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,680-க்கு விற்பனை.
4.முல்லை ரூ.640-க்கு ஏலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 1½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கும், முல்லை ரூ.640-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.49-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.310-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.
5.பசிபிக் பெருங்கடலில் இருந்து 200,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி சாதனை
வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து 200,000 கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பைகளை The Ocean Cleanup Mission மூலம் அகற்றப்பட்டுள்ளது. இதுவரை கடலிலிருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இது புதிய மைல்கல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் பெரும்பகுதி நீர் நிலைகள் வழியாக கடலில்தான் போய்ச் சேர்கிறது.அப்படி சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் கடல் வளத்தை பாதுகாத்து, வருங்காலம் வளமாக இருக்க அரசு முதல் தனி மனிதன் வரை அனைவரும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் சூழ்நிலையில், The Ocean Cleanup கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
6.சோயா மீல் ஏற்றுமதி அதிகரிப்பு
2022-23 ஆங்கில எண்ணெய் ஆண்டின் முதல் பாதியில் சோயாமீல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சோயா பொருட்களின் இந்தியாவின் ஏற்றுமதி 110% அதிகரித்துள்ளது. அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகியவற்றின் பெரிய கொள்முதல் காரணமாக இந்த ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் ஏப்ரல் மாத இலவச பயிற்சி விவரம்
18.04.2023 மாட்டு சாணத்திலிருந்து மதிப்பு கூட்டல் மற்றும் கலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
19.04.2023 பினாயில் சோப்பு ஆயில் சோப்பு பவுடர் தயாரித்தல்
20.04.2023 இயற்கை முறையில் சிறுதானியங்கள் பயிரிடுதல் தொழில்நுட்பம்
25.04.2023 டிரோன் மூலம் பூச்சி கொல்லி/ விரட்டி ( கெமிகல்/இயற்கை) தெளித்தல் செய்முறை விளக்க பயிற்சி.
மேலும் படிக்க