
மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கரோனா பாதிப்பு அதிகமில்லாத பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிபந்தனை மற்றும் சமூக இடைவெளியுடன் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 20ம் தேதி வரை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், அதேவேளையில் மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Relaxation of Lockdown for Non Hot Spot Zone)
மே 3ம் தேதிக்கு பிறகு எவையெவை செயல்படும் மற்றும் எவையெவை செயல்படாது என தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவிசய பொருட்கள் விற்பனை, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகள் போன்றவற்றிற்கு விலக்கு அளித்திருந்த வேளையில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு மேலும் சில துறைகள் தளர்க்கப் பட உள்ளன.
அனுமதிக்கப்பட்ட துறைகள் மற்றும் சேவைகள்
- வேளாண் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் 50% பணியாளர்களுடன் தோட்ட பணியை தொடரலாம். கால்நடைகள் தொடர்பான பால் கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்ட பணிகளில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதே போன்று மீன்வர்கள் பிடி தொழிலில் ஈடுபடலாம்.
- உயிர் காக்கும் துறையான மருத்துவத்துறைக்கு ஏற்கனவே விளக்கு இருந்து வந்தது. இருப்பினும் அதற்கு தொடர்புடைய மருத்துவமனைகள், மருந்தகங்கள், பரிசோதனை மையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் இயங்க அனுமதி அளித்துள்ளது.
- ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நூறு நாள் வேலை, கிராம அளவிலான இ சேவை மையங்கள் போன்றவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து சரக்கு போக்குவரத்தும் தடையின்றி செயல்படும். அதே போன்று தபால் நிலையங்கள், கூரியர் சேவைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை எப்பொழுதும் போல இயங்கும்.
- ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு தங்களது பணியை தொடரலாம்.
- சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்பட்டு கொண்டிருக்கும் உற்பத்தி சார்த்த தொழிற்சாலைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதே போன்று நிர்வாகமும் பணியாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களை அழைத்து வர போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
- கட்டுமானத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் வழக்கம் போல் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்யலாம்.
- அரசு அலுவலகங்கள் அனைத்தும் 33% ஊழியர்களுடன் இயங்கும். வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம். ஐடி சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.
செயல்படாத துறைகள் மற்றும் சேவைகள்
- பயணிகள் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டே இருக்கும். பேருந்து, ரயில், விமான சேவைகள் அடுத்த அறிவுப்பு வரும் வரை இயங்காது. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகளுக்கான தடை தொடரும்.
- சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களின் வாகனங்களை தவிர்த்து, பிற வணிக நிறுவனங்களின் வாகனங்கள் இயங்காது.
- அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்பட அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.
- திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. மேலும் வழிபாடு தலங்களில் பின்பற்றப்படும் திருவிழாக்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- நகர்புறங்களில் உள்ள கேளிக்கை தலங்களான மால்கள், திரையரங்கு, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பூங்காகள், பார்கள், மண்டபங்கள் என அனைத்தும் மூடப்பட்டே இருக்கும்.
- இறுதி சடங்கில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.
கரோனா தொற்று முற்றிலும் நீங்கும் வரை தற்போது மேற்கொள்ளும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்ற பட வேண்டும். மேலும் ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.