News

Tuesday, 25 June 2019 01:27 AM

ஈரோடு  மஞ்சளுக்கு புவிசார்  குறியீடு  கிடைத்துள்ளதால்  அதன்  தனித்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாக  விவசாயிகள்  மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

இந்திய  அரசு  கடந்த  1999-ம்  ஆண்டு  பல  வகையான  பொருட்களுக்கு  புவிசார் குறியீடு  பதிவு  மற்றும்  பாதுகாப்பு  சட்டம்  கொண்டு  வந்தது.  இதன்  மூலம், புவிசார்  வழங்கப்பட்ட  பொருட்களை  மற்ற  பகுதியினர்  விற்பனை செய்வதும், போலிகளும்  தடுக்கப்படுகிறது. மஞ்சள்  வகைகளில்  இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநில  வைகான்  மஞ்சள்,  ஒடிசா  கந்தமால்  மலை  மஞ்சள்  ஆகியவை  புவிசார் பெற்றுள்ளது.  இந்த  வரிசையில்  ஈரோடு  மஞ்சளும்  இடம்  பெற  வேண்டும்  என தொடர்ந்து  முயற்சி  எடுக்கப்பட்டு  வந்தது.  தேசிய   அளவிளான  மஞ்சள் சந்தையில் ,  ஈரோடு  மஞ்சளுக்கு  அதிக  வரவேற்பு  உள்ளது.  இங்கு  சாகுபடி  செய்யும்  மஞ்சளில்  குர்குமின் என்ற  வேதி  பொருளின்  அளவு  அதிகம்  உள்ளது.  இதனால், மஞ்சளின்  நிறம், சுவை , மணம்  வேறுபட்டதாக  இருக்கும்.  மேலும் , பல்வேறு  மருத்துவ  குணம்  உள்ள தால்,  இயற்கை  மருத்துவம், சித்தா மருத்துவத்தில்  பலவித   நோயிகளுக்கு   மருந்துகள்  தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு  சிறப்பு  வாய்ந்த  ஈரோடு  மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு  வழங்க வேண்டும்  என  கடந்த 2011-ம்  ஆண்டு   ஈரோடு  அஞ்சல்  வணிகர்கள்  மற்றும் கிடங்கு  உரிமையாளர்கள்  சங்கம்  சார்பில்,  ஈரோடு  மண்ணின்  தன்மை, மஞ்சளின்  தன்மை,  மஞ்சள்  விளையும்  பகுதிகளின்  எல்லை  குறித்த ஆவணங்களுடன், சென்னையில்  உள்ள  இந்திய  புவிசார்  குறியீடு  பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து  பலகட்ட  ஆயிவுகள்  மேற்கொள்ளப்பட்டன.  கடந்த 4 மாதங்களுக்கு  முன்னர்,  ஆட்சேபனை  தெரிவிப்பது  தொடர்பாக,  புவிசார் பதிவகத்தின்  ஆன்லைன்  இதழில்  அறிவிக்கை   வெளியிடப்பட்டது.  இதற்கு ஆட்சேபனை  இல்லாததால்,  ஈரோடு  மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு வழங்கப்பட்டது.  இதனால்  மஞ்சள்  விவசாயிகள்,  வணிகர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதன்மூலம்  மஞ்சள்  விலை  உயர்வதுடன்  ஏற்றுமதியும் அதிகரிக்க  வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

இது  குறித்து  இந்திய புவிசார் குறியீடு  பதிவகத்தில்  இணைப் பதிவாளர் சின்னராஜா  நாயுடு  கூறியதாவது:  ஈரோடு மண்ணின்  தன்மையை  கொண்டு மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு  வழங்கப்பட்டுள்ளது.   ஈரோடு மாவட்டம்,  திருப்பூர் மற்றும்  கோவை   ஆகிய  மாவட்டங்களில்  காங்கேயம்,  அன்னூர், தொண்டாமுத்தூர்  போன்ற  பகுதிகளில்  விளையும்  மஞ்சளுக்கு  ஈரோடு  மஞ்சள் என்ற  பெயர்  பொருந்தும்.  ஈரோடு  விதை மஞ்சணை   பிற  பகுதியினர்  வாங்கிச் சென்று  விதைத்தாலும்  அதை  ஈரோடு  மஞ்சளாக  கருத  முடியாது.

ஏனெனில்  மண்ணின்  அடிப்படையைக்  கொண்டு  தான்  புவிசார்  குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  ஈரோடு  மாவட்ட  மண்ணில் விளைந்தால்   மட்டுமே ஈரோடு  மஞ்சள்  என்று கருதப்படும்.  ஈரோடு  மஞ்சள்  மருத்துவ  குணம் கொண்டதாகவும்  இருக்கும்  என்பது  நிரூபிக்கப்பட்டதையடுத்து,  ஈரோடு மஞ்சளுக்கு  புவிசார்  குறியீடு  வழங்கி  கவுரவிக்கப்பட்டுள்ளது.  இதன்  மூலம் ஈரோடு  மஞ்சள்  உலக  அளவில்  அறியப்படும்  என்பதோடு,  மற்ற  மஞ்சளுடன் ஒப்பிடும் போது  கூடுதல்  விலையும்  கிடைக்க  வாய்ப்புள்ளது  என்றார்.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)