News

Tuesday, 29 December 2020 03:04 PM , by: Daisy Rose Mary

மலைத்தேன் உட்பட 35க்கும் மேற்பட்ட புதிய, பழங்குடியினச் சேகரிப்பு பொருள்கள் இந்தியப் பழங்குடியினக் கடைகளிலும், இணையதளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளதாக ழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் அறிக்கையில், இந்தியப் பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்களை விற்பதற்காக "எங்கள் வீட்டிலிருந்து உங்கள் வீட்டுக்கு" From Our Home to your Home என்ற எட்டாவது பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரம் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பால் (TRIFED)எட்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்கள், பலருக்கும் கிடைக்கும்.

இந்த வாரம் சேர்க்கப்பட்ட இயற்கைப் பொருள்களில் முக்கியமானது, தமிழக மலையாளிப் பழங்குடியினர் சேகரிக்கும் மலைத்தேன், சாமை வகைகள், புளி, மிளகு ஆகியவை ஆகும். இந்த மலையாளிப் பழங்குடியினர், வட தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் உள்ளனர். இங்கு 3,58,000 பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் மலைப் பகுதிகளில் விவசாயம் செய்கின்றனர்.

 

கடந்த சில வாரங்களில், அறிமுகம் செய்யப்பட்டப் பழங்குடியினர் சேகரிப்புப் பொருள்கள், 125 இந்தியப் பழங்குடியினர் விற்பனையகங்களிலும், மற்றும் இ-சந்தைத் தளமான tribesindia.com என்ற இணையதளத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)