News

Tuesday, 12 April 2022 08:04 AM , by: R. Balakrishnan

Gift for students watering birds

வெயிலின் தாக்கத்தில் தண்ணீர் இன்றி, தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என பள்ளி மாணவர்களிடம் தன்னார்வ இளைஞர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். கோடையில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு செல்லும் சூழலில், மனிதர்களால் கூடத் தாங்க முடியவில்லை. இதை போல, வெயிலின் தாக்கத்தால் பறவைகள், வனவிலங்குகள் உயிரிழப்புகள் வரை செல்லுகிறது. இந்நிலையில், பறவைகளின் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில், பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதை தன்னார்வலர்கள் பலரும் பொதுமக்களிடம் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

பறவைகளுக்கு தண்ணீர் (Water for Birds)

தஞ்சாவூரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சேர்ந்த இளைஞர்களான சதீஸ்குமார், வின்சென்ட், பாரதி ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக, மண்ணில் செய்யப்பட்ட சட்டியை வழங்கி வருகின்றனர். அதன்படி, தஞ்சாவூர் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் மாணவர்களுக்கு, மண்சட்டியை வழங்கினார். இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர், மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் கூறியதாவது; தற்போது கோடையால் பறவைகள் தண்ணீர் இன்றி தவிப்பதை தடுக்க பொது இடங்களிலும், வீடுகளிலும் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு மண்சட்டி வழங்கப்படுகிறது.

இதுவரை தஞ்சாவூரில், 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 500 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வைக்கும் போது, மாணவர்கள் அதை மொபைலில் படம் எடுத்து வைத்துக்கொள்ள கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் பறவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தங்கள், சான்றிதழ் பரிசாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க

கடலில் காற்றாலை மின் நிலையம்: தனுஷ்கோடியில் ஆய்வு மையம்!

வாடிய செடி, மரங்களுக்கு புத்துயிர் ஊட்டும் மாமனிதர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)