News

Thursday, 12 November 2020 11:30 AM , by: Daisy Rose Mary

Credit : Maalaimalar

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆடு சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது.

கொரோனோ ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆடு, மாடு சந்தைகள், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தீபாவளிப் பண்டிகையையொட்டி திறக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆடு சந்தை நேற்று நடைபெற்றது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன குறிப்பாக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான ஆடுகள் விற்பனை கொண்டுவரப்பட்டன.

ஒரு ஆட்டின் விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. வெறும் 3 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Credit : Dinamalar

நாமக்கல் மாட்டுச்சந்தை

இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களுக்கு பின் மாடு சந்தை கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதல் கேரளா, ஆந்திரா, கார்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, சேலாம், விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் இருந்தும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். இதில் 1000 மாடுகள் சுமார் 1 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க

தமிழக அரசின் மீன்கள் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை!!

மானிய விலையில் நோய் எதிா்ப்புத்திறன் கொண்ட நெல் விதைகள் - விவசாயிகள் பயன்பெறலாம்!!

ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் சாகுபடி செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)