கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. தமிழகம் உட்பட ஆறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பயன் பெறும் வகையில், ஐந்து நதி நீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் பயன் பெறும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவிரி இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
நதிகள் இணைப்பு (Rivers Linking)
கல்லணைக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, தெலுங்கானாவில் நல்கொண்டா, பிரகாசம் மாவட்டங்கள்; ஆந்திராவின் நெல்லுார், சித்துார் மாவட்டங்கள் பயன் பெறும். தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பயன் பெறும். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், தமிழகத்தின் தலைநகர் சென்னையின் குடிநீர் தேவையும் இத்திட்டத்தால் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவை. உலக வங்கி கடனுதவி பெற்று செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் கல்லணைக்கு பதிலாக, கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையுடன் கால்வாயை இணைக்க, தமிழகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் தங்களுக்கும் தண்ணீர் வேண்டும் என, கர்நாடகா ஆரம்பத்திலேயே முரண்டு பிடிக்கிறது; மற்ற மாநிலங்கள் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
ஆலோசனை கூட்டம் (Consultation meeting)
இதற்கிடையே, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற்று, பணிகள் துவங்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை, மத்திய நீர்வளத் துறையினர் துவங்கி உள்ளனர். இத்திட்டம் தொடர்பாக, டில்லி ரபி மார்கில் உள்ள ஷ்ரம் ஷக்தி பவனில், இன்று பிற்பகல் 3:00 மணிக்கு, ஆறு மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மேலும் படிக்க
குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!
அங்கக பயிர் மேலாண்மையில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பங்கள்!