1.இயற்கைக்கு மாறும் திருப்பதி: கோவில் வளாகத்தில் மூங்கில் பாட்டில்களில் தண்ணீர் விற்பனை!
திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது.பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்டீல் பாட்டில்கள் ரூ.300 மற்றும் 400-க்கு விற்பனை செய்தனர். சாதாரண பக்தர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிபட்டனர். இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அளித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ஒரிசா மாநிலத்தில் இருந்து மூங்கில்கள் வரவழைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் மூங்கிலை வெட்டி எடுத்து அழகிய வடிவில் குடிநீர் பாட்டில்களாக தயார் செய்துள்ளனர். இவை ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூங்கிலால் செய்யப்பட்ட பாட்டில்களில் உள்ள குடிநீர் புதிய சுவையுடன் உள்ளது. இதனால் இந்த குடிநீர் பாட்டில்களுக்கு பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
2.ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் அறிமுகம்!
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் (கியூ ஆர் கோடு) மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
3.ரூ.664 குறைந்தது தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்து, ரூ. 45,536க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,692க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நாட்களில் ரூ. 1280 வரை உயர்ந்த நிலையில் ரூ. 664 குறைந்துள்ளது.
4.ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க அரசு சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான அரசு சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் 10.05.2023 அன்று நடைபெறுகிறது.
ஆட்டுப்பண்ணையை தொடங்குவது முதல் அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கான அனைத்து தொழில்நுட்ப ஆலோசணைகள் மற்றும் ஆட்டுப்பண்ணையம் அமைக்க அரசு திட்ட அறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கபப்டும். ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் நேரடியாகவோ அல்லது மேற்காணும் தொலைபேசி எண் வழியாக தொடர்பு கொள்ளவும்.
91-94899 50555
91-94431 02139
91-94863 79484
04563-220244
அனைத்து மாவட்ட கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முன் பதிவு மிக அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
5.மா விலை நிர்ணயம் குறித்து முத்தரபு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித் துறை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மா விலை நிர்ணயம் குறித்து முத்தரபு கூட்டம் நேற்று (05.05.2023) நடைபெற்றது
6.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் மே மாத இலவச பயிற்சி விவரம்
இரண்டு நாட்கள் பயிற்சி
18.05.2022 & 19.05.2023 தேங்காய் ஓட்டிலிருந்து கலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
24.05.2023 - 25.05.2023 சிறு தானியங்களில் இருந்து உணவு பண்டம் தயாரித்தல் தொழில்நுட்பம்.
22.05.2023 -31.05.2023 கூடை பின்னுதல் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டுள்ளதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 9488575716
மேலும் படிக்க
பூண்டு- விவசாயத்திலும், ஆரோக்கியத்திலும் ஆற்றும் நன்மைகள் என்ன?