Train ticket booking
தமிழர் திருநாளாம் பண்டிகை வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு (Train Ticket Reservation)
செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்யலாம். ரயில் டிக்கெட் முன்பதிவு நாள், பயணம் செய்யும் நாள் மற்றும் கிழமை குறித்த பட்டியல் இதோ!
- செப்டம்பர் 14 - ஜனவரி 12 - வியாழன்
- செப்டம்பர் 15 - ஜனவரி 13 - வெள்ளி
- செப்டம்பர் 16 - ஜனவரி 14 - சனி
- செப்டம்பர் 17 - ஜனவரி 15 - ஞாயிறு - தைப்பொங்கல் தினம்
- செப்டம்பர் 18 - ஜனவரி 16 - திங்கள் - திருவள்ளுவர் தினம்
- செப்டம்பர் 19 - ஜனவரி 17 - செவ்வாய்- உழவர் திருநாள்
- செப்டம்பர் 20 - ஜனவரி 18 - புதன்
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், மேற்கூறிய கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுவதை விட முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்வது நல்லது.
மேலும் படிக்க