News

Monday, 28 February 2022 09:26 AM , by: R. Balakrishnan

Gold bond Issue today

நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் பத்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, இன்று துவங்க உள்ளது. இந்த வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,109 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இந்த தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்கி, மார்ச் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கப் பத்திரம் வெளியீடு (Golden Bond Release)

இன்று நடைபெறும் பத்திர வெளியீட்டின் போது தங்கத்தின் விலை, 5,109 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 5,059 ரூபாய்க்கு கிடைக்கும்.

கடந்த ஒன்பதாவது தங்க பத்திர வெளியீட்டின்போது, விலை, 1 கிராமுக்கு 4,786 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது.

இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1 கிராம் என்ற அளவில் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக தனிநபர்கள் 4 கிலோ வரையும், அறக்கட்டளை போன்றவை 20 கிலோ வரையும் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க

உலகிலேயே மிக அழகான கட்டடம்: எதிர்கால அருங்காட்சியகம் திறப்பு!

முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி நிர்ணயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)