News

Monday, 20 September 2021 11:00 AM , by: Elavarse Sivakumar

Credit : Unsplash

தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் தங்ககாசு, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த முயற்சி (Try to control)

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தின் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. எனவே கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனாத் தடுப்பூசிப் போடுவோரை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு பரிசுத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

பரிசுத்திட்டம் (The gift scheme)

இதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், பரிசுத்திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதன்படி தடுப்பூசி போடும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 சென்ட் அளவுள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும், இதனை ஒரு மாத காலத்திற்குள் அமைச்சர் வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார்.

தங்கக்காசு (Gold coin)

இதைத்தவிர, தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ஒரு கிராம் தங்கக்காசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள சேலைகள், ரூ.500 மதிப்புள்ள வேட்டிகள் தலா 10 பேருக்கும் வழங்கப்படும்.

ரீசார்ஜ் கூப்பன்கள் (Recharge coupons)

ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் தடுப்பூசி போட குவிந்தனர்.

மேலும் படிக்க...

தடுப்பூசிக்கு ஆன்ட்ராய்ட் போன் பரிசு – ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

இன்னும் 6 மாதங்கள்தான்- கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)