பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தங்க நகைகள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களுக்கான கடன்களுக்கான வட்டியை 1.45 சதவிகிதம் குறைத்துள்ளது.
பண்டிகைக் கால சலுகை (Festive season offer)
நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை யொட்டி, வாடிக்கைகளின் வசதிக்காக வட்டி குறைப்பு அறிவிப்புகளை பஞ்சாப் நேஷ்னல் வங்கி வெளியிட்டுள்ளது.
அதிரடி அறிவிப்புகள் (Notices of Action)
பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, பிஎன்பி தங்க நகைக் கடன்களின் வட்டி விகிதம் குறைப்பு, கூடுதலாக, பிஎன்பி வீட்டுக் கடன் விகிதம் குறைப்பு என பல அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பிஎன்பி இப்போது சவரன் கோல்ட் பாண்டிற்கு (Sovereign Gold Bond - SGB) கடன்களை 7.20 சதவீதத்திலும், தங்க நகைகளுக்கான கடன்களை (Gold Loan) 7.30 சதவிகிதத்திலும் வழங்குகிறது என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, பிஎன்பி வீட்டுக் கடன் (Home Loan) விகிதத்தையும் குறைத்துள்ளது. இப்போது இந்த கடன் 6.60 சதவிகிதத்திலிருந்து தொடங்கும். வாடிக்கையாளர்களுக்கான கார் கடன்கள் 7.15 சதவிகிதத்திலிருந்து துவங்குகிறது. வாடிக்கையாளர்கள் தனிநபர் கடன்களை 8.95 சதவிகிதத்திலிருந்து பெறலாம்.
கட்டணம் தள்ளுபடி (Fee discount)
பண்டிகை காலங்களில், தங்க நகைகள் மற்றும் SGB கடன்களுக்கான சேவைக் கட்டணங்கள்/செயலாக்கக் கட்டணங்கள் ஆகியவற்றை PNB முழுமையாகத் தள்ளுபடி செய்கிறது. சமீபத்தில் வங்கி வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களிலும் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மேலும் படிக்க...
வீட்டுக்கடன் வசதியை எப்படி தேர்வு செய்யலாம்? எளிய வழிமுறைகள் இதோ!
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்க முதலீடு தரும் புதிய பலன்!