சென்னை அரசு மற்றும் மத்திய பனை பொருட்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள அனைத்து ஆண், பெண் இருபாலரும் முன்பதிவு செய்வது அவசியம்.
பயிற்சி (Training)
வரும், 28ம் தேதி முதல் ஏப்ரல் 6 வரை, மாதவரம் மில்க் காலனியில் உள்ள பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இப்பயிற்சியில், தங்கத்தின் தரம் அறிதல், மதிப்பீடு செய்தல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.
பயிற்சி பெற விரும்பும் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பில்லை. கல்வித் தகுதி குறைந்தது 8-ம் வகுப்பு. கூடுதல் தகவல்களுக்கு, 94437 28438 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியின் இறுதியில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதிநிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகைக் கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம்.
மேலும் படிக்க