News

Monday, 20 March 2023 08:37 PM , by: Elavarse Sivakumar

தங்கம் விலை வரலாறு காணாத நிலையில் அதிகரித்துள்ளதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  முன்எப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 480 ரூபாயை எட்டியுள்ளது.

தனி கவுரவம்

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும், விரும்பி அணியப்படும் நகைகளில் தங்கத்திற்கு தனி இடம் உண்டு. ஏனெனில்,  நாம் அணியும் தங்க நகைகள், சமூகத்தில் நமக்கென தனி அந்தஸ்தையும், கவுரவத்தையும் பெருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொடரும் விலைஉயர்வு

தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அண்மைகாலமாக  தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.  இதனால், வாரம்தோறும் தங்கம் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்து வருகிறது. இந்த நிலைத் தொடர்ந்தால், நடுத்தரவாசிகளுக்கும் தங்கம் எட்டாக்கனியாக மாறிவிடும் ஆபத்து உருவாகலாம்.

ரூ.2320

இந்நிலையில் கடந்த வாரம் ரூ.5,270க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் தற்போது 5 ஆயிரத்து 500யைத் தாண்டிவிட்டது. கடந்த 12ம் தேதி ஒரு கிராம் தங்கம்  5 ஆயிரத்து 270க்கும், ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையானது.

ரூ.44,480

ஆனால் இன்று அதே ஒரு கிராம் தங்கத்தின் விலை, 5 ஆயிரத்து 560 ரூபாயாக அதிகரித்துள்ளது.  அதாவது கிராமுக்கு 290 ரூபாய்  வீதம்  விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கிடுகிடு உயர்வு

தங்கத்தின் விலையில் நிலவும் இந்த திடீர் உயர்வு, இல்லத்தரசிகளையும்,தங்க நகைப்  ப்ரியர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதேவேளையில், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களும் இந்த விலைஉயர்வால் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!

அகவிலைப்படி 6 % உயர்வு- அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)