கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது, இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்திருப்பது குறிப்பிடதக்கது.
தமிழ்நாட்டு பெண்கள் மட்டுமல்லாமல், மொத்தமாக பெண்கள் என்றாலே தங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் மோகம் அதிகம். அந்த வகையில், தற்போது தங்கத்தில் வரும் புதிய டிசைன்ஸ் கலேக்சன்ஸ் ஆண்களையும் வசிகரிக்கிறது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடதக்கது. எனவே இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை தொடங்கி 8 கிராம் தங்கத்தின் விலை கீழே காணவும்.
இன்று (27-01-2022) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 63 குறைந்து ரூ. 4,574-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. 504 குறைந்து ரூ. 36,592-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 67.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று (27-01-2022) ரூ. 67,700 ஆக உள்ளதும் குறிப்பிடதக்கது.
கொரோனா பெருந்தொற்றால் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். ஆகவே இதனால் தங்கம் தேவை அதிகரித்து வருகிறது.
வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)
வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.
தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம் (Check the purity of the gold)
நீங்கள் இப்போது தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க விரும்பினால், இதற்காக அரசு, ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. அதன் பெயர் 'பிஐஎஸ் கேர் ஆப்' ஆகும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம். இந்த செயலி மூலம், தங்கத்தின் தூய்மையை மட்டுமல்லாமல் தங்கம் தொடர்பான புகாரையும் இதில் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
2022 பட்ஜெட்டும் டிஜிட்டல் முறையில் தாக்கல், எவ்வாறு நடக்கும் இந்த பணி?
தங்கம் விலை குறைந்துள்ளது, எவ்வளவு, விலை என்ன? விவரம் உள்ளே!