நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, நுகர்வோரை அதிரிச்சி அடையச் செய்துள்ளது. அண்மைகாலமாக தொடரும் இந்த விலைஉயர்வு முதலீட்டாளர்களையும் மிரளச் செய்துள்ளது என்றே சொல்லலாம்.
மின்னும் தங்கம்
திங்கம் என்னும் இந்த உலோகம், பல வேளைகளில், நமக்கு பலவிதங்களில் கைகொடுக்கும் உலோகம் ஆகும். ஆபரணமாக அணியும்போது நமக்கு எப்போதுமேத் தனிக் கவுரவத்தைத் தாங்கி வரும் தங்கம், நிதி நெருக்கடி ஏற்படும்போதும் தவறாமல் பணமாகவும் கைகொடுக்கிறது. இதன் காரணமாகவே தங்கம் எப்போதுமே, முதலீட்டிற்கான உலோகமாவும் கருதப்படுகிறது.
கிடு கிடு உயர்வு
ஆனால் அண்மைகாலமாக சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்றத்தன்மை காரணமாக, தங்கம் விலை ராக்கெட் வேகத்தை உயர்ந்து வருகிறது.குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, முன்பு எப்போதும் இல்லாத வகையில், உயர்ந்த தங்கம் விலை, புதிய உச்சத்தை எட்டியது. சில நாட்களுக்குப் பிறகு, ஏற்ற–இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை, அட்சயத் திரிதியை முன்னிட்டு மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது.
எதிர்பார்ப்பு
அட்சயத்திரிதியை முடிவடைந்த நிலையில், தங்கம் மீண்டும் இறங்கு முகத்திற்குத் திரும்பும் என எண்ணிக் காத்திருந்த நுகர்வோருக்கு, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ரூ.728
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,648-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,706-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.81.80-க்கும் கிலோ ரூ.81,800-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் , இல்லத்தரசிகளும், முதலீட்டாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஒரு சவரன் தங்கம் ரூ.46 ஆயிரத்தை நெருங்கியது திருமணம் உள்ளிட்ட வைபவங்களை வைத்திருப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும் படிக்க…
செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு 8% வட்டி- மத்திய அரசு அதிரடி!