இன்று தங்கம் விலை மிகப் பெரிய மாற்றம் நிலவுகிறது. எனவே நீங்கள் நகை வாங்க திட்டமிட்டிருந்தால் தற்போது உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில்,இன்று தங்கம் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலையில் அதிரடிச் சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,740 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,835 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 760 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி
வெள்ளி வாங்குவோருக்கும் இன்று ஹேப்பி நியூஸ். சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.67.30 ஆக இருந்தது. இன்று அது 66 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிற நகரங்களில்
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,836 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,836 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,836 ஆகவும், கேரளாவில் ரூ.4,839 ஆகவும், டெல்லியில் ரூ.4,836 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,836 ஆகவும், ஒசூரில் ரூ.4,837 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,837 ஆகவும் இருக்கிறது.
மகிழ்ச்சி
பெட்ரோல் விலை, பால் விலை, எண்ணெய் விலை, காய்கறி விலை, சிலிண்டர் விலை என எல்லாப் பக்கமும் விலை உயர்வு இருக்கும் சூழலில் தங்கம் விலையும் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. எனினும் இன்று ஆறுதல் தரும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது.
விலை உயருமா?
சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. ஒரு நாள் குறைந்தால் அடுத்த நாளே உயர்த்தப்படுகிறது. இன்று விலை குறைந்துள்ள நிலையில் நாளை உயருமோ என்ற அச்சத்தில் நகைப் பிரியர்கள் உள்ளனர். எனினும் விலை வாங்குவதற்குள் இன்றே நகை வாங்கிவிட்டால் நல்லது.
மேலும் படிக்க...