
கடந்த மாதம் 39 ஆயிரம் ரூபாயைத் தாண்டிய ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது சவரனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது, வாடிக்கையளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்டம் காட்டும் தங்கம்
தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கமேக் காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்ற இறக்கம்
இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த மாதம் தங்கம் விலையில் சரிவு தொடர்கிறது. செப்டம்பர் மாதம் 16ம் தேதியான இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,626 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.37008க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.2000 சரிவு
நேற்று ஒரு கிராம் தங்கம், 4,680 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.37,440க்கும் விற்பனையானது. இன்று ஒரே நாளில் ரூ.432 குறைந்துள்ளது.
கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, சவரனுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டி ரூ.39,024-க்கு விற்பனையானது. அதன் பிறகு மார்ச் 8-ந்தேதி வரலாறு காணாத வகையில் ரூ.40,448 ஆக உயர்ந்தது.
ரூ.37,000
அதன் பிறகு மே, ஜூன், ஜூலை மாதங்களில் விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்போது குறைந்து ரூ.37 ஆயிரத்திற்கு வந்துள்ளது.
மேலும் படிக்க...