நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.42,080 யைத் தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்திருப்பவர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் தொடரும் அதிகரிப்பு, அதனை நடுத்தரவாசிகளுக்கு எட்டாக்கனியாகவே மாற்றிவிடுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருப்பது, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தனிப்பட்ட கவுரவம்
தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது.
தொடரும் அதிகரிப்பு
குறிப்பாக ரஷியா- உக்ரைன் இடையே போர் தொடர்வதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தங்கத்தின் பக்கமே இருக்கிறது. இதன் காரணமான முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவி வருகிறது.
அதிரடி சரிவு
கடந்த சில நாட்களாகவே ரூ.5 ஆயிரத்திற்கும் கீழ் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று ரூ.5260க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.42,080க்கு விற்கப்பட்டது.
ஒரிருநாட்களில்
கடந்த 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,130க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.41,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலைஉயர்வு திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருப்பவர்களையும், வாடிக்கையாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க…
ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!