கடந்த மாத இறுதியில் 38 ஆயிரம் ரூபாயைத் தாண்டிய ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. இதனால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆட்டம் காட்டும் தங்கம்
தங்கம் விலையில் கடந்த மாதம் ஏற்ற இறக்கமேக் காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில் தங்கம் விலை சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்கப்பட்டது.கடந்த 4-ந்தேதி தங்கம் விலை திடீரென்று ரூ.38,920 ஆக அதிகரித்தது. 5-ந்தேதி சற்றே குறைந்து ரூ.38,760-க்கு விற்பனையானது. மறுநாளும் அதேவிலையில் நீடித்தது.
ஏற்ற இறக்கம்
இந்நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.
ரூ.40,000
தங்கம் இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.39,040-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டி ரூ.39,024-க்கு விற்பனையானது. அதன் பிறகு மார்ச் 8-ந்தேதி வரலாறு காணாத வகையில் ரூ.40,448 ஆக உயர்ந்தது. அதன்பிறகு சற்று விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டாலும் ஏப்ரல் 18-ந் தேதி மீண்டும் ரூ.40,400-க்கு விற்பனையானது.
ரூ.39,000
அதன் பிறகு மே, ஜூன், ஜூலை மாதங்களில் விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்போது உயர்ந்து ரூ.39 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,850-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,880-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க...