நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 February, 2022 9:16 AM IST

தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 2 வாரங்களில் சவரனுக்கு 1,728 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த கிடுகிடு விலைஉயர்வு, தங்க நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஷியா-உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பொறுத்து, தங்கம் விலையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கம் காணப்படும். ஆனால் இப்போதுள்ள நிலைமையை பார்க்கும் போது, தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலையில் சிறிது சரிவு நிலவியது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்தது.

ரூ.40,000

பிப்ரவரி 16ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4 ஆயிரத்து 663-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்து 304-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில், தங்கம் விலை இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.38 ஆயிரத்தைக் கடந்து, விரைவில் 40,000த்தைத் தாண்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே காணப்படும் நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,728 வரை உயர்ந்திருக்கிறது.

தங்கம் விலையைப் போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து இருக்கிறது. கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.500-ம் அதிகரித்து, ஒரு கிராம் 68 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.68 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானிகூறியதாவது:-

ரஷியா-உக்ரைன் இடையே போர் நிகழும் சூழல் இருந்து வருவதாலும், இந்த 2 நாடுகளுக்கு சீனாவும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வருவதாலும், 3-ம் உலக போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் காரணமாக, உலக பொருளாதாரம் மந்தநிலை அல்லது வீழ்ச்சி அடையலாம் என்ற எண்ணத்தில், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் அதன் விலை உயருகிறது.

ரஷியா-உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பொறுத்து, தங்கம் விலையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கம் காணப்படும். ஆனால் இப்போதுள்ள நிலைமையை பார்க்கும் போது, தங்கம் விலை அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

பூங்காவில் அம்போவெனக் கைவிடப்பட்ட 410 பவுண்ட் தங்கக்கட்டி!

பறக்கும் சொகுசுப் படகு- விண்ணைத் தொடும் அனுபவம்!

English Summary: Gold price reaches Rs 38,000 - Rs 1,728 increase per savaran!
Published on: 18 February 2022, 09:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now