தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்டு, சவரனுக்கு ரூ.1100க்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 13 ரூபாயும், சவரனுக்கு 014 ரூபாயும் விலை குறைந்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,820 ஆகவும், சவரன், ரூ.38,560 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து ரூ.4,892 ஆகவும், சவரனுக்கு 104 ரூபாய் சரிந்து, ரூ.39 ஆயிரத்து 136 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,892 க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து3 வது நாளாக உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளது. கடந்த3 நாட்களில் மட்டும் கிராமுக்கு 147 ரூபாயும், சவரனுக்கு ரூ.1,176 உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் கிராம் ரூ.4,775 ஆக இருந்தது, அதன்பின் ரூ.4,758ஆகச் சரிந்தது. ஆனால் புதன்கிழமையிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, சவரன் ரூ.1100க்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால் இன்று தங்கம் விலை சரிந்து ஊசலாட்டத்தில் உள்ளது.
தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1000க்கு மேல் உயர்ந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீண்டகாலத்துக்குப்பின் தங்கம் விலையும் சவரன் ரூ.39ஆயிரத்தைக் கடந்துள்ளது. இனிவரும் நாட்களில் தங்கம் விலை ஏற்றத்துடன் பயணிக்கவே வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஏனென்றால், அமெரிக்க பணவீக்க புள்ளிவிவரங்களில் அந்நாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்கம் உயரவில்லை என்பதால் வட்டிவீதம் அதிகரிக்காது என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையும் கடந்த இருநாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகம் செய்து முடிந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் உயர்ந்து வருகிறது.
மேலும் படிக்க: