சென்னையில் தங்கம் விலை 2- வது நாளாக இன்றும் சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 36,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்திற்கு மவுசு (Mausu for gold)
எத்தனைதான் அணிகலன்களை அணிந்தாலும், தங்கம்தான் நமக்குத் தனி கவுரவத்தை உருவாக்கித்தருகிறது. அதுமட்டுமல்லாமல், தங்கத்தை அணிகலனாக மாற்றி அணியும்போது, பெண்களுக்கு தனி அழகும், புத்துணர்ச்சியும், பெருமையும் கிடைக்கிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சர்வதேச சந்தையில் நிலவிவரும் விலை மாற்றத்திற்கு ஏற்ப சென்னையிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற -இறக்கம் இருந்து வருகிறது.
ரூ.37,000க்குக் கீழ் (Under Rs 37,000)
இதன் காரணமாக கடந்த வாரம் சவரன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் கடந்த 20-ந்தேதி சவரன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.632 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்து136 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ.4 ஆயிரத்து 517ஆக இருந்தது.
2-வது நாளாக சரிவு (Decline on the 2nd day)
இந்த சரிவு இன்றும் தொடர்கிறது. இன்று கிராமுக்கு 17 ரூபாய் வீதம் சவரனுக்கு மொத்தம் 136 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் 4,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.36,000த்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உகந்த நேரம் (Optimal time)
எனவே தங்கம் வாங்க விரும்புபவர்கள், மகளுக்கு தைமாதம் திருமணம் வைத்திருப்பவர்கள், இன்று கடைக்குச் சென்று தங்கம் வாங்கலாம்.
ஆறுதலாக
கடந்த 15ம் தேதியோடு ஒப்பிடும்போது, தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் 1,088 ரூபாய் குறைந்துள்ளது. ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தொடர்ந்து 2வது நாளாக சரிவில் இருப்பது, நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மேலும் படிக்க...
ஒரு ரூபாய்க்குக்கூடத் தங்கம் வாங்கலாம்- விபரம் உள்ளே!
லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!