நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 December, 2021 4:36 PM IST
Gold Price Today

செவ்வாயன்று COMEX இல் தங்கம் விலை 0.36 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 1,797 டாலராக உள்ளது என்று HDFC செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் கூறினார். தங்கம் விலை இன்னும் ஒரு அவுன்ஸ் 1,800 அமெரிக்க டாலருக்கும் கீழே வர்த்தகம் செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. திங்கள்கிழமையும் அதன் விலை குறைந்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.47,256 ஆக பதிவாகியுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வால் தங்கம் விலை சரிந்து வருகிறது. திங்கள்கிழமையும் இதே நிலைதான் சர்வதேச சந்தையிலும் காணப்பட்டது. செவ்வாயன்று, 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.172 குறைந்து, அதன் விலை ரூ.47,246 ஆக பதிவானது. திங்கட்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.47,418 ஆக இருந்தது.

தங்கம் போல் இல்லாமல் வெள்ளி விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.342 ஆக உயர்ந்தது. வெள்ளியின் விலை நேற்று முன்தினம் ரூ.60,166 ஆக இருந்தது, ஆனால் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக ரூ.342 ஆக உயர்ந்து ரூ.60,508 ஆக இருந்தது. மறுபுறம், சர்வதேச சந்தையில், ரூபாயின் மதிப்பு வலுவாக காணப்பட்டது மற்றும் டாலருக்கு எதிராக 17 காசுகள் உயர்ந்து காணப்பட்டது. செவ்வாய்கிழமை ஒரு டாலரின் விலை ரூ.75.73 ஆக இருந்தது.

தங்கம் விலை குறித்து ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் தபன் படேல் கூறுகையில், “சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,797 டாலராகவும், வெள்ளியின் விலை அவுன்ஸ் 22.53 டாலராகவும் இருந்தது. செவ்வாயன்று COMEX இல் தங்கம் விலை 0.36 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 1,797 டாலராக உள்ளது என்று HDFC செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் கூறினார். தங்கம் விலை இன்னும் ஒரு அவுன்ஸ் 1,800 அமெரிக்க டாலருக்கும் கீழே வர்த்தகம் செய்யப்படுகிறது.

எதிர்கால வர்த்தக நிலை(Future trading position)

குறைந்த தேவைக்கு மத்தியில் ஊக வணிகர்கள் தங்கள் நிலைகளை குறைத்துக்கொண்டனர், இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை ஃபியூச்சர் வர்த்தகத்தில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.71 குறைந்து ரூ.48,169 ஆக இருந்தது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், பிப்ரவரி மாதத்திற்கான தங்க ஒப்பந்தம் ரூ. 71 அல்லது 0.15 சதவீதம் குறைந்து, 10 கிராமுக்கு ரூ.48,169 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது, தங்கம் விலை வீழ்ச்சிக்கு வர்த்தகர்கள் தங்கள் நிலைகளை குறைத்ததே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில், நியூயார்க்கில் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.08 சதவீதம் உயர்ந்து 1,796.10 டாலராக உள்ளது.

மேலும் படிக்க:

அதிரடி ஆஃபர்: ஆதார் கார்டை வைத்து பைக் வாங்கலாம்!

புதிய தேர்தல் சீர்திருத்த மசோதா மற்றும் அதன் விவரம்

English Summary: Gold prices fall by Rs 172 What is the price of 10 grams?
Published on: 22 December 2021, 04:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now