அட்சயத்திரிதியை முன்னிட்டு சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 496ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது. அதிலும், மே 3ம் தேதி அட்சயத்திரிதியைக் கொண்டாடப்படுவதால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்று தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரேநாளில் சவரனுக்கு ரூ.496 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 62 ரூபாய் சரிந்து, ஒரு கிராமம் 4,841ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 38,729 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மே 1ம் தேதி, ஒரு கிராம் தங்கம் 4,903 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39,224ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் தங்கம், 39,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4,945ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருமண சீசனில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது ஒருபுறம் இருக்க, அட்சயத்திரியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என எண்ணியவர்களுக்கும், இன்றைய விலைச்சரிவு பெரும் ஆறதலைத் தந்துள்ளது.
மேலும் படிக்க...
வீடு தேடிவரும் தங்கம் - உங்களுக்கு ரூ.2500 லாபமும் கிடைக்கும்!
கொரோனா போலப் பரவும் சாக்லெட் நோய் தொற்று-150 குழந்தைகளுக்கு பாதிப்பு!