தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்று சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன? தற்போது சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது இன்னும் விலை சரியுமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
மீண்டும் உச்சத்தில் பணவீக்கம்
அமெரிக்காவில் மீண்டும் கடந்த ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதம் உச்சம் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உணவு பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பலவும் பணவீக்கத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் சுட்டி காட்டியுள்ளது. இதற்கிடையில் பிரிட்டீஸ் பணவீக்கமானது 30 ஆண்டு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள், வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
தங்கத்திற்கான தேவையானது பிசிகல் தங்கமாகவும், முதலீட்டு ரீதியாகவும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.எனினும் மீடியம் டெர்மில் வரவிருக்கும் டேட்டாக்கள் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 4,665 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 37,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 5,085 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து, 40,680 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து, 49,317 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இதிலும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
மேலும் படிக்க: